• Blockquote

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

  • Duis non justo nec auge

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

  • Vicaris Vacanti Vestibulum

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

  • Vicaris Vacanti Vestibulum

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

  • Vicaris Vacanti Vestibulum

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

டொயோட்டா கிர்லோஸ்கர்'லிவா' பெட்ரோல் கார் அறிமுகம்

Monday, 3 October 2011 4 comments

புதுடில்லி:ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம், 'லிவா' என்ற சிறிய வகை பெட்ரோல் காரை அறிமுகம் செய்துள்ளது.இந்நிறுவனத்தின், இரண்டாவது கார் தொழிற்சாலை, 3,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, நிறுவனத்தின், 'எடியோஸ்', கார் உற்பத்தி திறன், ஆண்டுக்கு 70,000 என்ற அளவில் உள்ளது. விரிவாக்கத்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை, ஆண்டுக்கு 1.20 லட்சமாக அதிகரிக்கும். இந்நிறுவனம், கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து, கூட்டு திட்டத்தில் இந்தியாவில் களமிறங்கியது.தற்போது, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறிய வகை காரான 'லிவா' பெட்ரோலில் இயங்கக் கூடியது. இவ்வகை கார்களின் விற்பனை விலை, 3.99 லட்சம் ரூபாயிலிருந்து 5.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹிரோஷி நாககாவா தெரிவித்தார்

முன்னாள் அமைச்சர் நேரு மீது நில அபகரிப்பு புகார்

Thursday, 28 July 2011 4 comments


திருச்சி, ஜூலை 28: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது நில மோசடிப் புகார் ஒன்று திருச்சியில் இன்று புதிதாக பதிவு செய்யப்பட்டது.
கே.என்.நேரு மற்றும் துணை மேயர் மற்றும் திமுக நகரச் செயலாளரான அன்பழகன் ஆகியோர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த திருச்சி, பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த ஒய்.சாலமன் தேவராஜ் என்பவர், இந்தப் புகாரை அளித்தார். அதன்பேரில் அவர்கள் இருவர் மீதும் புகார் பதிவு செய்யப்பட்டது.

பிரதமரை உள்ளடக்காத லோக்பால் மசோதா – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

3 comments


டெல்லி, ஜூலை 28: லோக்பால் வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன்படி, லோக்பால் விசாரணை வரம்பிலிருந்து பிரதமர் மட்டுமன்றி அரசு அதிகாரிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கோரி வருகிறார். இதற்காக அவர் டில்லியில் உண்ணாவிரதமும் இருந்தார். லோக்பால் மசோதா விசாரணை வரம்பிற்குள் பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி பதவியில் இருப்பவர்களைச் சேர்க்க வேண்டும் என்பது அவரது பிரதான கோரிக்கையாகும். இதற்காக ஜன லோக்பால் என்ற வரைவு மசோதாவையும் அவரது குழுவினர் தயாரித்தனர். இது குறித்து மத்திய அரசுத் தரப்பினருக்கும் அன்னா ஹசாரே குழுவினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்தப் பிரச்சனை குறித்து அடுத்து நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என மத்திய அமைச்சர் கபில் சிபல் கடந்த 22ம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில், லோக்பால் மசோதா அம்சங்கள் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடை பெற்றது. அன்னா ஹசாரே, மற்றும் அரசுத்தரப்பினர் தயாரித்த இரு வரைவுகளும் ஆராயப்பட்டன. லோக்பால் விசாரணை வளையத்திற்குள் பிரதரைச் சேர்ப்பது உள்ளிட்ட இருதரப்பு முரண்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்ப்பதில் தமக்கு ஆட்சேபம் இல்லை என்று மன்மோகன் சிங் கூறியதாகவும் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் அதை ஏற்கவில்லை என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே, ‘ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவைத் தாக்கல் செய்யும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வலிமையான லோக்பால் சட்டத்தை அமல்படுத்தினால், நாடு முழுவதும் இந்த அரசுக்கு நன்றிக் கடன்பட்டதாக இருக்கும். எனவே, லோக்பால் மசோதாவை பலவீனப் படுத்தாமல், வலிமையான அம்சங்களுடன் நிறைவேற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும் என மத்திய அமைச்சரவையைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.
ஆனால் அமைச்சரவைக் கூட்டம் அவரது வேண்டுகோளை ஏற்கவில்லை. லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை சேர்ப்பதில்லை. பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின் அவர் லோக்பால் விசாரணை வரம்புக்குள் வருவார் என்று அது முடிவு செய்துள்ளது. லோக்பால் மசோதவிலிருந்து பிரதமருக்கு விலக்கு அளிக்கும் வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.
லோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி ஒருவர் இருப்பார். 8 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதன் விசாரணை வரம்புக்குள் அரசுஅதிகாரிகளும் சேர்க்கப்படவில்லை என்று செய்தித்துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்
இந்த நிலையில் பிரதமரை உள்ளடக்கிய, வலுவான லோக்பால் வரைவு மசோதாவை வரைவை உருவாக்கக் கோரி ஆகஸ்ட் 16-ம் தேதியிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் அன்னா ஹசாரே ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2011 Little Rock Fashion Week

0 comments


The Little Rock Fashion Week growing in America and the fashion week will be held July in downtown Little Rock. This fashion week will showcase collections of national clothing and latest jewelry designer as well as the best of region’s hairstylist makeup artists with musical performers. This year line up of designers and boutiques as local and national artists. Designer Christopher Youngstar one of the South’s leading artists, his artistic expression by using models bodies as a canvas in motion. Designer portrays the beautiful movement of life, while he making bold fashions statements. Chavon Sewell will debut her fashion Chavon Shree.

Summer Trend: The Red Dress

8 comments


If you're looking for something hot to warm up our dull summer then wearing a sexy red dress is just what the doctor ordered...

Perfect for everything from a night out to a formal function, the red dress is colourful and versatile, suiting so many skin types, shapes and complexions.

Recently the lovely Mila Kunis was spotted at the premiere of her new film Friends With Benefits alongside her hottie of a co-star Justin Timberlake in this sexy, sophisticated number to the left.

In honour of this demure effort made by Miss Kunis, FemaleFirst have put together a collection of red dresses to suit your summer engagements and some handy accessory hints too.

Here we have a stunning Laura Ashley dress that would be perfect for any wedding guest outfit you may be trying to find.

The wrap around effect at the bust makes it incredibly flattering and the floating pleats ideal for that stylish, summer look. It will look fab with either court pumps or wedges depending on your preference. Finish with some simple, silver jewellery and a plain clutch.

சமச்சீர் கல்வி போராட்டம் – மாணவர்களை கட்டுப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

Tuesday, 26 July 2011 0 comments


சென்னை, ஜூலை 26:சமச்சீர் கல்வியை எதிர்த்து போராட்ட அறிவிப்புகள் வெளியாகிவரும் நிலையில் “மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர்களே, கட்டுப்படுத்த வேண்டும்,” என, பள்ளிக்கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வித்திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் கல்வி மட்டுமே கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பள்ளி மாணவர்களை திரட்டி சசமச்சீர் கல்வியை அமல்படுத்தகோரி, போராட்டம் நடத்த மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், மாணவர்களை கட்டுப்படுத்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி,”"பள்ளி வரும் மாணவர்கள் பள்ளி நேரத்தில் வெளியில் சுற்றவும், பள்ளி வளாகம் வந்த பின் வெளியே செல்லவும் அனுமதிக்க கூடாது. பள்ளி நேரம் முடியும் வரை மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தான் இருக்க வேண்டும். பள்ளிக்கு வந்த மாணவர்கள் இடையில் வெளியேறினால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என, முதன்மை கல்வி அதிகாரிகளால் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

வீட்டுமனை முறைகேடு – ஜாபர்சேட் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு?

0 comments


சென்னை, ஜூலை 26: வீட்டுமனை ஒதுக்கியது தொடர்பாக இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தப்பட்டதை அடுத்து, ஆதாரங்களின் அடிப்படையில் ஜாபர்சேட் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு சமூக சேவர்கள் என்ற பெயரில் முறைகேடாக வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதில் விதிகள் கடைப்பிடிக்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டது.
இது பற்றி தமிழக மக்கள் உரிமை கழக செயலாளர் புகழேந்தி போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜத்தை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அவர் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார். லஞ்ச ஒழிப்பு ஐ.ஜி. குணசீலன் மேற்பார்வையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி தகவல்கள் சேகரித்தனர்.
இது தொடர்பாக இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். முன்னர் உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. யாக இருந்து தற்போது மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக பணியாற்றும் ஜாபர்சேட் அவரது நண்பர் ராஜூ, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜமாணிக்கம், டி.எஸ்.பி.க்கள் பாண்டியன், வினோதன், கணேசன், அறிவழகன், தமிழக ஆளுனர் பர்னாலா மகனின் நண்பர் உள்ளிட்ட 9 பேர் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
50-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் 9 இடங்களில் இந்த சோதனை நடத்தினார்கள். சோதனை நடைபெறுவதைத் தொடர்ந்து வீடுகள் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் வரை சோதனை நீடித்தது. யாரும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை. வீட்டுமனை ஒதுக்கீடு தொடர்பாக வீட்டில் இருந்தவர்களிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
வீட்டில் இருந்த ஆவணங்களையும் கைப்பற்றி விசாரித்தனர். சோதனைக்குள்ளான கூடுதல் டி.ஜி.பி. ஜாபர் சேட் வீடு சென்னை அண்ணா நகர் 14-வது மெயின் ரோடு ஆர்.பிளாக்கில் உள்ளது. இவரது வீட்டின் அருகில் ஜாபர்சேட் நண்பர் ராஜூ என்பவரது வீடும் உள்ளது. இந்த 2 வீடுகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இதனிடையே, ஜாபர் சேட்டின் மாமனார் முகமது சலீம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். முகமது சலீம் முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாபர்சேட்டுக்கு முகப்பேரில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 4 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருவான்மியூரிலும் அவருக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டு வசதி வாரியமனை ஒதுக்கப்பட்டது. இதை அவர் ரத்து செய்து விட்டு சமூக சேவகர் என்ற பெயரில் தனது மகள் ஜெனிபர் பெயருக்கு அந்த வீட்டு மனையை மாற்றியுள்ளார். இதற்காக ஜெனிபர் பெயரில் ஒரே நாளில் ரூ. 1 1/2 கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளது.
இது சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை மீண்டும் ரத்து செய்து விட்டு மனைவி பர்வீன் பெயருக்கு மாற்றியதாகவும், இதற்காக 3 முறை அரசாணை வெளியிடப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் ஜாபர்சேட் வீட்டில் சோதனையிடப்பட்டு விசாரணை நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள் வீட்டுமனை வாங்கும்போது அது பற்றி அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது போன்ற விதிகளும் சரியாக பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஐ.பி.எஸ். அதிகாரியான ஜாபர்சேட் கடந்த ஆட்சியில் போலீஸ் துறையில் முக்கிய பங்கு வகித்தார். திருச்சி மண்டல ஐ.ஜி. யாக இருந்த அவர் சென்னையில் உளவுப் பிரிவு ஐ.ஜி. யாக நியமிக்கப்பட்டார். அப்போது கூடுதல் டி.ஜி.பி. பதவி காலியாக இருந்தது.
ஜாபர் சேட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உளவுப் பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.நியமிக்கப்படாமல் இருந்தார். அதன் பிறகு ஜாபர் சேட்டுக்கு பதவி உயர்வு அளித்து உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஆனார். தமிழக சட்டசபை தேர்தலின்போது ஆளுங்கட்சிக்கு விசுவாசியாக இருப்பதால் இவரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரை மேற்கு வங்காளத்துக்கு தேர்தல் பார்வையாளராக தேர்தல் கமிஷன் நியமித்தது.
ஜாபர்சேட் அங்குபணியாற்ற மறுத்து விடுமுறையில் சென்றார். தேர்தல் முடிந்ததும் அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார். புதிய அரசு அவரை உளவுத்துறையில் இருந்து அதிரடியாக மாற்றி மண்டபம் அகதிகள் முகாம் அதிகாரியாக இடமாற்றம் செய்தது. ஜாபர்சேட் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜாபர்சேட் வீட்டில் நடந்த சோதனை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோதனை நடந்த மற்றொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜமாணிக்கம் முன்பு செய்தித்துறை செயலாளராக இருந்தார். கடந்த ஆட்சியில் கருணாநிதியின் செயலாளர்களில் ஒருவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி வீட்டில் வசித்து வருகிறார். இன்று இங்கு போலீஸ் அதிகாரிகள் முற்று கையிட்டு சோதனை நடத்தினார்கள்.
இதே போல் சோதனைக்குள்ளான டி.எஸ்.பி.க்கள் பாண்டியன், வினோதன், கணேசன், அறிவழகன் ஆகியோர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றியவர்கள். மேலும் ஆளுனர் பர்னாலா மகனின் நண்பர் நஜிமுதீன், வீட்டிலும் கீழ்ப்பாக்கத்தில் சண்முகம் என்பவரது மகள் பத்மா வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது. இவர்கள் வீட்டுமனை பெற்றது தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சரிபார்த்து வருகிறார்கள்.
இதில் தவறு நடந்து இருந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், வீட்டு மனைகளை திரும்ப பெறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

 
Sakhsen news © 2011